மட்டக்களப்பு வடமுனையில் வீட்டை தாக்கிய யானை: உயிர் தப்பிய தம்பதியினர்
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமான வடமுனை பிரதேசத்தில் காட்டுயானை தாக்கியதில் வீடு இடிந்து வீழ்ததையடுத்து கணவன் மனைவி தெய்வாதீனமாக உயிர்தப்பிய சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை எல்பி கிராமத்தினுள் சம்பதினம் இரவு 11 மணிக்கு ஊடுருவிய காட்டுயானை வீடு ஒன்றை தாக்கியதையடுத்து வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததையடுத்து நித்திரையில் இருந்த கணவன் மனைவி தெய்வதீனமாக உயிர்தப்பி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதேவேளை குறித்த பிரதேசத்தில் கடந்த வெள்ள அனர்தத்தினால் மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்துள்ளதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் காட்டுயானை ஊருக்குள் புகுந்துள்ளதுடன் குறித்த கிராமத்தில் மீள்குடியேறியுள்ள 400 குடும்பங்கள் யானைகளில் இருந்து தமது உயிரை காப்பாற்ற தினம் தினம் போராடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்