மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தலைமைக் காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வலயங்களின் முன்பள்ளி ஆசிரியர்களால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இதன்போது முன்பள்ளி ஆசிரியர்கள் பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

மேலும், மகஜர் ஒன்று மட்டக்களப்பு அரசாங்க அதிபர் ஊடாக ஆளுநருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனார்.