மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அருள்ராஜ்

மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ் என்பவரை நியமிக்க நியமிக்க பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றும் திருமதி ஜே. ஜே. முரளிதரன் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் பொது சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ள நிலையில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக தற்போது கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான அருள்ராஜ் என்பவரை  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

2003ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்த அருள்ராஜ், கிண்ணியா, சேருவல பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும் முன்னர் இருந்த வடகிழக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை ஆகியவற்றிலும் கடமையாற்றியுள்ளார்.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

இவர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றி நிலையில் திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு அதன்பின் பின் கிழக்குமாகாண ஆளுநரின் செயலாளராக கடமைபுரிந்து வந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிராக நியமிக்கப்பட்டுள்ளார்.