
மட்டக்களப்பு மாவட்ட இளம் எழுத்தாளர்களுக்கான இலக்கிய அமர்வு
-மட்டக்களப்பு நிருபர்-
புத்தசாசனம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக்கழகம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மட்டக்களப்பு மாவட்ட இளம் எழுத்தாளர்களுக்கான இலக்கிய அமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மற்றும் உதவி மாவட்ட செயலாளரின் ஆலோசனையின் பேரில் ,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இலக்கிய துறையில் எழுத்தாளர்களின் பங்குபற்றுதல்களையும் ,தேசிய ரீதியில் அவர்களின் எழுத்தாற்றல்களையும், ஊக்குவிப்பதற்குமான செயலமர்வு இலங்கை கலைக்கழகத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் வளவாளராகக் கலந்து கொண்டார்.
இலங்கை கலைக்கழக உறுப்பினரும்,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச இலக்கிய ஆலோசனைக் குழு உப செயலாளர் இணேஷ், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம்.சீ.சீ.ஜெயினாலாப்தீன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் 14 பிரதேச செயலகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளம் எழுத்தாளர்கள் இச்செயலமவில் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
