மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமானது ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (02) இன்று இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது முன்னேற்ற மீளாய்வு செய்யப்பட்டதுடன், மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து அபிவிருத்திகள் தொடர்பான முன்மொழிவுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.