மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,737 குடும்பங்களைச் சேர்ந்த 11,977 பேர் பாதிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,737 குடும்பங்களைச் சேர்ந்த 11,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

3,037 குடும்பங்களைச் சேர்ந்த 10,031 பேர் தங்களது உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 9 இடைத்தங்கல் முகாம்களில் 334 குடும்பங்களைச் சேர்ந்த 921 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.