மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மயிலம் பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பியூச்சர் மைன்ட் போர் எடியுகேஸன் வெல் பார் (Future mind for Education well fare) குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் ச.கோகுல் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மட்டக்களப்பு வலயக்கல்வி பிரதிப் பணிப்பாளர் மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் பாடசாலை நலன் விரும்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.