
மட்டக்களப்பு – மயிலம்பாவெளி பகுதியில் குடிநீர் இணைப்பு!
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி பகுதியில் குடிநீர் இணைப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
மயிலம்பாவெளி பகுதியில் குடிநீர் இணைப்பு இதுவரை கிடைக்கப்பெறாத பகுதிகளுக்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு குடிநீர் வழங்கும் நோக்கத்தின் அடிப்படையில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது அப்பகுதி மக்களுடன் அவர்களது பிரச்சனைகள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துரையாடியதுடன், அவர்களது கோரிக்கைக் கடிதங்களையும் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் நீர்வழங்கல் திணைக்கள அதிகாரிகள், கிராமசேவகர், கட்சியின் இணைப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



