மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களது தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோரது பங்கேற்புடன் பிரதேச செயலாளர் திரு.எஸ்.சுதாகர் ஏற்பாட்டில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், திணைக்களங்களின் உயரதிகாரிகள், கணக்காளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.