மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் எல்லைக்கு உட்பட்ட மட்/பாரதி வித்தியாலயம் மற்றும் மட்/ சாரதா வித்தியாலயத்தில் முதன் முறையாக 2025ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் கல்வியை ஆரம்பிக்க உள்ள மாணவச் செல்வங்களுக்கு உறவின் சிகரம்  மஞ்சந்தொடுவாய் இளையோர் தொண்டர் அமைப்பினால் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் காலணி மற்றும் கற்றல் உபகரணங்கள் அடங்கிய பைகள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வை திறம்பட நடாத்திய அதிபர்களுக்கு நன்றி தெரிவித்து கருத்து தெரிவித்த அமைப்பின் தலைவர் மஞ்சந்தொடுவாய் கிராமத்தில் அமைந்துள்ளது 2 பாடசாலைகளுக்கும் கல்வி மற்றும் கிராமம் சார்ந்த அனைத்து செயற்பாடுகளுக்கும் அமைப்பு சகல விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்