மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை பூட்டு

பொலன்னறுவையில் தொடர்ந்தும் பெய்து வரும் மழையினால், பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான்கதவுகள் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் மன்னம்பிட்டி பாலத்திற்கு மேல் நீர் ஊடறுத்து செல்வதால் அந்த வீதியூடான போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது

அத்துடன், மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இதனால் வேறு மாகாணங்களில் இருந்து வரும் வாகனங்கள் மாற்று வழிகளில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.