மட்டக்களப்பில் துப்பாக்கி, மெகசின் மீட்பு

மட்டக்களப்பு – பெரியவட்டவான் பகுதியில் ரி – 56 வகை துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரியவட்டுவானில் உள்ள படைமுகாமில் உள்ள மைதானம் ஒன்றில் செங்கல் உற்பத்திக்காக அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டபோதே இந்த ரி – 56 வகை துப்பாக்கியும் மெகசின் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் மெகசின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.