
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற இரத்ததானம்
-மட்டக்களப்பு நிருபர்-
“உத்திரம் கொடுப்போம் உயிர் காப்போம் ” எனும் தொனிப் பொருளிலான இரத்ததான முகாம் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலய முன்னரங்க வாயில் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதனை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயம் மற்றும் மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து நடாத்தியது.
மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குநர் அருட்பணி நிக்சன் அடிகளார்
தலைமையில் நடைபெற்ற இரத்ததான ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மட்டக்களப்பு புனித மரியாள் பேராலய மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு குருதியினை வழங்கி இருந்தனர்.
மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயம் மற்றும் மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனம் ஆகியன இணைந்து வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவுடன் ” உத்திரம் கொடுப்போம் உயிர் காப்போம் ” எனும் தொனிப்பொருளில்நடாத்தியது.
இந்த இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு வைத்தியர் பி. பிரஷ்ணவி இரத்த வங்கிப் பிரிவு , பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம் .எம் .பைசல் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு தாதிய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
