மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் கண்காட்சி

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் விஞ்ஞானக் கண்காட்சி பாடசாலையின் அதிபர் நிதாஞ்சலியின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை ஈரம்பமானது.

வெள்ளிக்கிழமை பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரமே பார்வையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது .

இரண்டாம் நாளான சனிக்கிழமை கண்காட்சியைப் பார்வையிடுவதற்குப் பெருமளவான பொது மக்கள் வருகை தந்ததைக் காணமுடிந்தது.

கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வுக்கு அதிதிகளாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள்,  அருட்தந்தையர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் பழைய மாணவர்கள், மாணவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.