
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்த நபர்
-அலுவலக செய்தியாளர் சௌமினி சுதந்தராஜ்-
மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கன்னங்குடா பகுதியை சேர்ந்த கஜரூபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளதுடன் மரணவிசாரணை அதிகாரியின் வருகைக்காக சடலம் குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நபரின் உறவினர்கள் யார் என்பது இது வரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் சடலம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
