
மட்டக்களப்பு – பிரித்தானிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து நலிவுற்றோருக்கு வீடுகள் கையளிப்பு
-மட்டக்களப்பு நிருபர்-
பெரிய பிரித்தானியா லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் லண்டன் வட்ஸ் அமைப்பு அதன் இலங்கை கிளையான மட்டகளப்பை மையமாகக் கொண்டு இயங்கும் -வட்ஸ் என்பன இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நழிவுற்ற வறுமை கோட்டில் கீழ் வாழ்கின்ற குடும்பங்கள் மற்றும் விசேட தேவையுடைய மக்களின் நலன் கருதி 7 வீடுகளை இவ்வருடம் மட்டக்களப்பு பிரதேசங்களில் நிர்மாணித்து குறித்த பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள் அனுமதியுடன் தெரிவு செய்யபட்ட மிகவும் பொருத்தமான பயனாளிகளிடம் கையளித்து வருகின்றன.
இதன் முதல் கட்டமாக இன்று புதன்கிழமை மூன்று வீடுகள் பயனாளிகளிடம் லண்டன் வட்ஸ் அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி ஹெலன் கங்காதரன் தலைமையில்
பட்ஸ் மட்டக்களப்பு அமைப்பின் தலைவர் எல் ஆர் டேவிட் ஏற்பாட்டில் கையளிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் செயலாளர் ஸ்ரீதரன் மற்றும் லண்டன் பட்ஸ்,மட்டக்களப்பு பட்ஸ் அமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்கள்,பிரதேச செயலாளர்கள் எனைய அரச உத்தியோகத்தர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் முதலாவது வீடு கையளிப்பு நிகழ்வு கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டான்சேனைப் பிரதேசத்திலும், இரண்டாவது வீடு உன்னிச்சை நெடியமடு பிரதேசத்திலும், மூன்றாவது வீடு மண்முனை வடக்கு பனிச்சையடி எச் வலய கிராம சேவையாளர் பிரிவிலும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. வாசுதேவன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்களான அருள்மொழி மற்றும் அலியார்,மண்முனை வடக்கு சமூகசேவை உத்தியோகத்தர் எஸ். சிவநாயகம், அபிவிருத்தி உத்தியோகத்தர் மீன ரோஜினி, கிராமசேவை உத்தியோகத்தர்கள், லண்டன் பட்ஸ் மற்றும் மட்டக்களப்பு பட்ஸ் அமைப்பின் உத்தியோத்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
