மட்டக்களப்பு-பாலவிநாயகர் அறநெறிப் பாடசாலை அங்குரார்ப்பணம்!
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு அருள்மிகு ஸ்ரீ பால முருகன் ஆலய பரிபாலன சபையினரின் சிவ தொண்டர் திருக்கூடத்தின் அனுசரணையில் இருதயபுரம் மேற்கு அருள்மிகு ஸ்ரீ பால முருகன் ஆலய அறநெறிப் பாடசாலை அங்குரார்ப்பணமும், திருநீலநற்க்க நாயனாரின் குரு பூஜையும் நேற்று வியாழக்கிழமை ஆலய வளாகத்தில் இடம் பெற்றது
பெரிய ஊரணி சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளுடன், நாயன்மார்களின் திருவுருவப்படம் ஏந்திய அறநெறி பாடசாலை மாணவர்களின் ஊர்வலம் மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு அருள்மிகு ஸ்ரீ பால முருகன் ஆலயம் வரை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் இடம்பெற்ற திருநீலநற்க்க நாயனாரின் குரு, தீபாரதனை பூஜைகளுடன் இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பால முருகன் ஆலய அறநெறி பாடசாலை அங்குரார்ப்பணம் நிகழ்வு, சமய சொற்பொழிவுகளும் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு ராமகிருஷ்ணமிஷன் பொது மேலாளர் சுவாமி நீலமாதவானந்தாஜீ மக ராஜ், சிவ தொண்டர் திருக்கூட ஆலோசகர் பி.ஜெயராஜ் மற்றும் பால முருகன் ஆலய பரிபாலன் சபையின் சிவ தொண்டர் திருக்கூட உறுப்பினர்கள், ஊரணி சரஸ்வதி வித்யாலய அதிபர், சமூக செயற்பாட்டாளர்கள், அறநெறிப் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களுக்கான சான்றிதழ்கள், சிவ சின்னங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்