
மட்டக்களப்பு பரமேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வித்தியாலய அதிபர் எஸ்.கதிர்காமத்தம்பி தலைமையில் கடந்த திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் – 1975 ஆண்டு சாதாரண தர பழைய மாணவர்கள் குழுவின் நிதி உதவியுடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது
இதே வேளை இப்பாடசாலையில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் அருட்தந்தை சி.வி அன்னதாஸ், புனித ஜோசப் வாஸ் சபை உறுப்பினர்கள்,
புனித மிக்கேல் கல்லூரியின் – 1975 ஆண்டு சாதாரண தர பழைய மாணவர்கள் குழுவின் உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.






