மட்டக்களப்பு நகை வர்த்தகரின் 3000 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருட்டு

கொழும்பு செட்டியார் தெரு பகுதியில் நகை விற்பனை நிலையம் நடாத்தி வரும் காத்தான்குடி வர்த்தகரின் 3,000 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளது.

செட்டியார் தெரு, மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய பகுதிகளில் நகை விற்பனை நிலையங்களை நடத்திச் செல்லும் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த அஹமது முஹய்தீன் உமர் ஹசீம் என்ற வர்த்தகரின் நகைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொண்ட கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் நகை விற்பனை நிலையத்தில் பணிபுரியும் இருவரே நகைகளை திருடியுள்ளதாக  நீதிமன்றத்தில் நேற்று புதன் கிழமை தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.