
மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரி விவசாய மாணவர்களுக்கு மண்வெட்டிகள் வழங்கி வைப்பு
-மஞ்சந்தொடுவாய் நிருபர்-
மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரி விவசாய மாணவர்களுக்கான கள வேலைகளுக்கு 10 மண்வெட்டிகளை லண்டனில் வசிக்கும் மதிகுணன் என்பவர் வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரியின் முன்னாள் மாணவரான மதிகுணனிடம் சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.ரவீந்திரன் விடுத்து வேண்டுகோளிற்கினங்க இவை வழங்கப்பட்டுள்ளன.
19 வருடத்தின் பின்பு இவர் கல்லூரியை நினைத்துப்பார்த்திருப்பது வரவேற்கத்தக்க விடயம் என கல்லூரியின் அதிபர் எம்.சோமசூரியம் தெரிவித்தார் .
இந்நிகழ்வில் பகுதித்தலைவர் சிவராஜா விரிவுரையாளர் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரிக்கு 2025 இல் விவசாய டிப்ளோமா பாடநெறியை ஆரம்பிக்குமாறு அதிபர் சோமசுசூரியம்,சிரேஸ்ட ஊடகவியலாளர் ரவீந்திரன் ஆகியோர் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.




