மட்டக்களப்பு தேற்றாத்தீவு ஆலயத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸாரின் ஏற்பாட்டில் தேற்றாத்தீவு ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த சிரமதான பணியில் ஆலயத்தின் பரிபாலன சபை உறுப்பினர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், தேத்தாதீவு கிராம இளைஞர்கள், பிரதேசவாசிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆலயம் மற்றும் ஆலயத்தை அண்டியுள்ள கடற்கரை பிரதேசம் சுத்தம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குணரத்ன, குறித்த பகுதிக்கு வருகை தந்து அனைத்து செயற்பாடுகளையும் செயற்படுத்தியதுடன் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகரும் வருகை தந்திருந்தார்.