மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் வாகன விபத்து

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் இன்று புதன் கிழமை பிற்பகல் விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் வாகரையை அண்மித்த பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியால் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மகேந்திரா வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இரு வாகனமும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் வாகனத்தில் பயணித்தோருக்கும் காயம் ஏற்ப்பட்டுள்ளது, எனினும் விபத்து தொடர்பில் மேலதிக தகவல் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்