மட்டக்களப்பு-தாந்தாமலையில் காட்டு யானை உயிரிழப்பு!
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வயல் பிரதேசத்தை அண்டிய வாய்க்கால் ஒன்றில் குறித்த காட்டு யானை இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளது.
யானை உயிரிழந்தமை தொடர்பில் வெல்லாவெளி பட்டிப்பளை பிரதேச வனவிலங்கு திணைக்க உத்தியோகத்தர்கள் மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்