
மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் விடுதலை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்
கணவதிப்பிள்ளை மோகனை, இன்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்
விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்யும் விதமாக அவர்களின் படங்களை முகப்புத்தகத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஒரு வருடமும் மூன்று மாதமுமான காலப்பகுதியில் சிறைதண்டனை அனுபவித்து வந்த கணவதிப்பிள்ளை மோகன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
