
மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் நடாத்தும் உலக நாடக நாள் விழா
சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நடன நாடகத்துறை நடாத்தும் உலக நாடக நாள் விழா நேற்று புதன் கிழமை இடம்பெற்றது.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அரங்கில் நேற்று புதன் கிழமை மற்றும் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அரங்கில் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெறுகின்றது.
குறித்த நிகழ்வின் போது விவேகாநந்தரின் திரு உருவ சிலைக்கு அதிதிகளால் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
மேலும் இந் நிகழ்வின் தொடர்ச்சியாக இன்றைய தினமும் கல்லூரி அரங்கில் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றது.




