
மட்டக்களப்பு சின்ன ஊறணியில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த முதலை – மடக்கி பிடித்த பொதுமக்கள்
மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் வீடொன்றினுள் இருந்து 6 அடி நீளமான முதலையொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
நள்ளிரவில் கடும் போராட்டத்திற்கு மத்தியில் குறித்த முதலையை மடக்கி பிடித்துள்ளனர்.
நேற்று பெய்த மழை காரணத்தால் வாவிகள் மற்றும் குளங்களில் நீர் நிறம்பி அவற்றிலிருந்து முதலைகள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்களை நோக்கி வந்ததாக குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சின்ன ஊறணி கிராம மக்கள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்ததை அடுத்து அவர்கள் வருகை தந்து கட்டி வைத்திருந்த முதலையை எடுத்துச் சென்று மக்கள் நடமாட்டமற்ற பகுதியில் விடுவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்