மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற கலை நிகழ்வுகள்

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் மாணவிகளின் கலை நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது சங்கீதம், நடனம், நாடகம் ஆகிய பல்கலை நிகழ்வுகள் மாணவிகளால் அரங்கேற்றப்பட்டது, அத்துடன் தமிழ் மொழியில் சித்தரிக்கப்பட்ட பாடல், ஆங்கில மொழியின் மூலமாக நாடகம், பறங்கியரின் கலாச்சார நடனம், நவீன முறையில் ஆன கூத்து ஆகியவையும் இடம்பெற்றது.

பாடசாலை கலையரங்கில் அதிபர் அருட் சகோதரி நிதாஞ்சலி தலைமையில் இன்று காலை 9.00 மணி அளவில் ஆரம்பமாகி இடம்பெற்ற நிகழ்வுகள், மீண்டும் மாலை 3 மணி அளவில் ஆரம்பமாகும்

இதில் அருட்சகோதரிகள், பாடசாலை அதிபர், அசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.