
மட்டக்களப்பு – கொழும்பு இடையேயான புகையிரத சேவை நேரம் மாற்றம்
மட்டக்களப்பு – கொழும்பு இடையேயான புகையிரத சேவையில் இன்று திங்கட்கிழமை முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 01.30 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் புலதிசி காலை 09.00 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
கொழும்பிலிருந்து மாலை 03.15 இற்கு புறப்படும் புலதிசி இரவு 10.30 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
இரவு 07.40 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் மீனகயா அதிகாலை 04.15 மணிக்கு கொழும்பு சென்றடையும்.
இரவு 11.00 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் மீனகயா காலை 06.45 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
காலை 06.10 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் உதயதேவி மாலை 03.00 மணிக்கு கொழும்பு சென்றடையும்.
காலை 06.05 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் உதயதேவி மாலை 03.00 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
குறித்த மாற்றத்தின்படி கீழே நேர அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.
💢மட்டக்களப்பு – கொழும்பு
அதிகாலை – 01.30 புலதிசி
காலை. – 06.10 உதயதேவி
இரவு. – 07.40 மீனகயா
💢கொழும்பு – மட்டக்களப்பு
காலை. – 06.05 உதயதேவி
மாலை. – 03.15 புலதிசி
இரவு. – 11.00 மீனகயா
💢மட்டக்களப்பு – மாகோ சந்தி
காலை 11.15 ஸ்லோவ் ட்ரெயின்
மேலும் புலதிசி, மீனகயா புகையிரதங்களில் மாத்திரமே முன்பதிவு செய்து கொள்ள முடியும். உதயதேவி புகையிரதத்தில் 2ஆம் வகுப்பு முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
