
மட்டக்களப்பு கொட்டிச்சோலையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
மட்டக்களப்பு கொட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை காலை சுற்றிவளைத்தனர்.
குறித்த சுற்றி வளைப்பு தேடுதலின் போது 6 பரள்களில் ஆயிரக்கணக்கான மில்லி லிட்டர் கோடா மற்றும் கசிப்பு போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட கோடா மற்றும் கசிப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
