
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் மின்சாரம் தாக்கி 5 பிள்ளைகளின் தந்தை பலி
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிர் இழந்துள்ளார்.
கொக்கட்டிச்சோலை – கச்சைக்கொடி சுவாமிமலை பகுதியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை மயிலிப்போடி என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
குறித்த நபர் குடியிருக்கும் வீட்டின் வேலியில் இணைக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் சிக்கியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மரணம் மீதான விசாரணையினை கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரியும் மேற்கொண்டிருந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்