மட்டக்களப்பு கிரான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கிரான் நிருபர்

மட்டக்களப்பு கிரான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பஷ பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் பெரு விழா.

24/03/2024ம் திகதி திங்கட்கிழமை கர்மாரம்பம்பத்துடன் ஆரம்பமாகி 25/3மேல் ரத்தன்நியாசம், யந்திரஸ்தாபனம், பிம்பஸ்தாபனம் அஷ்டபந்தனம் இடம்பெற்று 26/03 திகதி செய்வாக்கிழமை இன்று ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் சிவன் அம்பாள், ஸ்ரீமஹாலஷ்மி, முருகன் , சுப்பிரமணியர்,நவக்கிரகங்கள்,ஸ்ரீவைரவர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு எண்ணெய்காப்பு சார்த்தும் நிகழ்வை தொடர்ந்து.

27/03/2024ம் திகதி புதன்கிழமை காலை 9:32மணி தொடக்கம் 10:32 மணிவரையுள்ள சுபமுகூர்த்த நேரத்தில் மாக கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து 48நாட்காள் மண்டலாபிஷேக பூசைகள் இடம்பெறும் .

மேற்படி கிரிகைகள் யாவும் கும்பாபிஷேக பிரதம குரு சர்வதேச இந்துமத குருபீடாதிபதி _சபரிமலைக் குருமுதல்வர் சிவாகம கலாநிதி ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையிலான குருமர்களினால் மாக கும்பாவிஷேகம் நடாத்தப்படும்.

விழாக் காலங்களில் பத்த அடியார்கள் ஆலயத்துக்கு  வருகை தந்து வழிபட்டு திருவருள் பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைக்கின்றானர்.