
மட்டக்களப்பு கிரான்குளத்தில் சற்று முன்னர் விபத்து: ஒருவர் காயம்
மட்டக்களப்பு கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையில் சற்று முன்னர் வீதியை விட்டு விலகி கார் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலுள்ள மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காரில் பயணம் செய்தவர் காயமடைந்துள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது. அத்தோடு உயர் மின் அழுத்த மின்சாரத் தூணும் உடைந்து விழுந்துள்ளதால் அப்பகுதியில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருவதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைககளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

