
மட்டக்களப்பு-கிரானில் யானை தாக்கி மீன் வியாபாரி உயிரிழப்பு
-மட்டக்களப்பு நிருபர்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கருங்காலிச்சேனை பகுதியில் இன்று சனிக்கிழமை காலை காட்டுயானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை ஆனந்தன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
வாழைச்சேனை பகுதியில் இருந்து மீன்களை எடுத்துக் கொண்டு புலிபாய்ந்த கல் ஊடாக கருங்காலிச்சேனை, பெண்டுகள் சேனை பகுதிக்கு விற்பனை செய்யச் சென்ற போதே யானை தாக்கி மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
