
மட்டக்களப்பு-கிண்ணையடி ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீ மிதிப்பு
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி ஸ்ரீ மாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு நிறைவும், முதலாவது தீ மிதிப்பு நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
வயலும் வயல் சார்ந்த இடமாகிய கிண்ணையடி கிராமத்தில் அமையபெற்ற ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, தொடர்ந்து ஏழு நாட்கள் இடம்பெற்று, ஆனி பூரணையில் திருப்பள்ளையம், வினாயக பானை எடுத்தல் மற்றும் தீமிதிப்பு, திருக்குளிர்த்தி வைபத்துடன் நிறைவுபெறும்.
ஆலயமானது நூற்றாண்டு தொட்டு கிராமிய வழிபாட்டு முறையுடனேயே இடம்பெற்று வருகின்றது
குறித்த ஆலயமானது, ஓலை கொட்டகையில் அமைத்தே முன்னோர்கள் திரு சடங்கினை செய்து வந்ததுடன், கடந்த 8 -10 வருடங்களுக்கு முன் பாரம்பரிய ஓலை (கிடுகு) முறையினை மாற்றி கல்லினால் ஆலயம் அமைத்து கொண்டாலும், பாரம்பரிய முறையையே பின்பற்றி திருச்சடங்கு நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் இம்முறை முதன் முதலாக தீ மிதிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

