மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம்

ஒவ்வொரு மாதமும் 24 ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவி அமிலநாயகி தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று திங்கட்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டங்களை தமக்கு பின் இளம் சந்ததியினர் முன்னெடுத்துச் செல்வார்கள் என்றும் நீதி கிடைக்கும் வரை இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்