மட்டக்களப்பு-காத்தான்குடியில் பாடசாலை மாணவரை தாக்கிய ஆசிரியர் கைது

மட்டக்களப்பு-காத்தான்குடி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் கடந்த 9 ஆம் திகதி பாடசாலையின் அதிபரால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் மாணவன் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனைத்தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலையின் அதிபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.