மட்டக்களப்பு – காத்தான்குடியில் ஜஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது
மட்டக்களப்பு – காத்தான்குடியில் ஜஸ் போதை பொருளுடன் வியாபாரி நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு விற்பனை நோக்கத்திற்காக ஐஸ் போதைப்பொருளை கொண்டு வந்த வியாபாரி தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபரிடம் இருந்து 10 கிராம் 33 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
