
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் காப்பற் வீதி இடும் வேலைத்திட்டம்
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் காப்பற் வீதி இடும் வேலைத்திட்டம் இன்று புதன்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் பணிப்புரையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்றுப்பொறியியலாளர் அருமைநாயகம் லிங்கேஸ்வரனின் மேற்பார்வையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன், அமைப்பாளர் சந்துரு, சிரேஸ்ட தொழில்நுட்ப உதவியாளர் ரவி, களுவாஞ்சிக்குடி கிராமத்தலைவர் கந்தவேள், இளைஞர் அணித்தலைவர் சுரேஸ் முன்னாள் கிராமத்தலைவர் மு.வாமதேவன், கிராம முக்கியஸ்தர் வே.மூ.கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
