மட்டக்களப்பு-களுவன்கேணி கடற்பரப்பில் காணாமல் போன இளம் மீனவர் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பு – களுவன்கேணி கடற்பரப்பில் காணாமல் போயிருந்த இளம் மீனவர், இன்று வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மீனவர், கடந்த புதன்கிழமை தோணி கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில், காணாமல் போயிருந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
சடலமாக மீட்கப்பட்டவர், களுவன்கேணி-வோட்வாடி வீதியைச் சேர்ந்த, வடிவேல் வினோதன் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த துயர சம்பவம், குடும்பத்தினரையும் கிராம மக்களையும், பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
