மட்டக்களப்பு கல்லடி பகுதியில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்
மட்டக்களப்பு கல்லடி பகுதியில் இன்று புதன் கிழமை காலை அதிகளவான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
காலநிலை மாற்றம் காரணமாக கடல் அலைகள் சீற்றம் கொண்டுள்ள நிலையில் இவ்வாறு திடீரென தொடர்ச்சியாக மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினமும் காத்தான்கு கடற்கரை பகுதியில் இவ்வாறு இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.
இவ்வாறு இறந்து கரையொதுங்கும் மீன்களால் அப்பகுதியில்துர்நாற்றம் வீசுவதாகவும் குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
