மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தபால் மூல வாக்களிப்பு!

-மட்டக்களப்பு நிருபர்-

ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் ஆரம்பமான தபால்மூல வாக்களிப்பு தற்போது மிகவும் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.

உதவித் தெரிவத்தாட்சி அலுவலரின் மேற்பார்வையின் கீழ் தபால் மூல வாக்களிப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்று வருவதுடன், ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் கட்சிகள் சார்பில் பிரதி நிதிகளும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்