மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா!

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

அதிபர் திருமதி சுதாகரி மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கே.சித்திரவேல் மற்றும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது விழாவில் மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, கலையாழி சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.