மட்டக்களப்பு – ஏறாவூர் காட்டு மாஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் வருடார்ந்த திருச்சடங்கின் தீமிப்பு

கிழக்கிலங்கையில் மிகப்பழமை வாய்ந்த , புகழ்பூத்த சக்தி வழிபாட்டுத் தளங்களில் ஒன்றான, மட்டக்களப்பு – ஏறாவூர் 4ஆம் குறிச்சி காட்டு மாஞ்சோலை அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் வருந்த திருச்சடங்கின் இறுதி நாளானா இன்று வியாழக்கிழமை தீமிப்பு உற்சவம் பல்லாயிரம் அடியார்களின் மத்தியில் இடம்பெற்றது.

காலை அம்பாளுகான விசேட பூஜை ஆராதனையுடன் பக்தர்களின் அரோகரா கோசங்கள் முழங்க, தெய்வாதிகள் ஆடிவர, அம்பாளுக்கான இவ்வாண்டிற்கான பூமிதிப்பு எனப்படும் தீமிதிப்பு வழமையான வருடார்ந்த நிகழ்வாக இடம்பெற்றது.

கடந்த 27ஆம் திகதி அம்பாளுக்கான திருக்கதவு திறந்தலுடன் ஆரம்பமாகியதுடன். இவ் ஆண்டிறாகான வருடாந்த சடங்கில் பாற்குடபவணி, வீதி ஊர்வலம் என்பனவும் சிறப்பாக நடைபெற்றதுடன் இன்றைய இறுதிநாள் சடங்கில் தீமிதிப்பு இடம்பெற்றது.

இம்முறை தீமிதிப்பில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாக குறிப்பிடத்தக்கதாகும்.