மட்டக்களப்பு ஏறாவூரில் இரும்பு கடையில் தீ விபத்து
மட்டக்களப்பு ஏறாவூரில் இரும்பு கடையில் தீ விபத்து
மட்டக்களப்புஇ ஏறாவூர் மிச்நகர் தாமரைக்கேணியில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் கடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை தீயணைப்பு பிரிவு மற்றும் ஏறாவூர் நகரசபை இபிரதேச பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டள்ளது.
தீயினால் பெரும் தொகையான பொருட்களும் சேதமடைந்து உள்ளன.
தீ பரவல் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.