மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி நெறி!!

இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின்  புலம்பெயர் தகவல் மையத்தின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட  ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் வளவாளராக  பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஸ்ரோ மீடியாவின் ஸ்தாபகர் அயாஸ் பட் கலந்து கொண்டார் .

இதன் போது செய்திகள், குறுங்காணொளிகளை  உருவாக்கும் போது கருத்திற் கொள்ள வேண்டிய விடயதானங்கள், ஊடக துறையில் நவீன தொழில்நுட்பங்களை  உபயோகிக்கும் முறைகள் பற்றியும்  விரிவாக செயன்முறை பயிற்சிகளுடன் ஊடக செயற்பாட்டாளர்கள் தெளிவூட்டப்பட்டனர்.

இந் நிகழ்வில் இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் இணைப்பாளர் மெஹமட் , புலம்பெயர் தகவல் மையத்தின்  ஆலோசகர்களான சுமித்ரா சதாசிவம்,சரத் பல்லேகம ஆகியோர் கலந்து கொண்டனர்.