
மட்டக்களப்பு உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றிரவு மழை
மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று சனிக்கிழமை அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றிரவு மழை பெய்யக்கூடும்.
அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் மணித்தியாலத்துக்கு 35 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
