
மட்டக்களப்பு இருதயபுரத்தில் சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு போட்டி
மட்டக்களப்பு இருதயபுரம் எவர்கிறீன் விளையாடுக் கழகம் நடத்திய சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை கழகத் தலைவர் வின்சென்ட் கோட்பிரீ தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், சிறப்பு அதிதியாக இருதயபுரம் மேற்கு கிராம உத்தியோகத்தர் சுகந்தினி ஜெகதர்ஷன் மற்றும் ஜெயந்திபுரம் கிராம உத்தியோகத்தர் விக்டரின் றெலிக்டா டொமினிக் கலந்து சிறப்பித்தனர்.
விளையாட்டு போட்டியில் மரதன், முட்டி உடைத்தல், தலையணைச் சமர், காலில் பலூன் கட்டி நடனம் ஆடுதல், மாறு வேடப் போட்டி, முதியோருக்கான ஓட்டம், தேங்காய் துருவுதல், கம்பம் சுற்றுதல், கயிறு இழுத்தல், கண் கட்டி நீர் நிரப்புதல், போன்ற பல விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன.
இதன்போது இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், கிராமப் பொதுமக்கள் என
போட்டிகளில் பங்கு பற்றியவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்