மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் அறநெறிப் பாடசாலையின் வைரவிழா

-மட்டக்களப்பு நிருபர்-

கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் அறநெறிப் பாடசாலையின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் வைரவிழா இன்று சனிக்கிழமை கல்லடி சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக இந்தியா தஞ்சாவூர் ஸ்ரீ இராமகிருஷ்ணமடத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்தஜீ மஹராஜ் கலந்து கொண்டார்.

இதன்போது அறநெறிப் பாடசாலையின் பல்வேறு நிகழ்வுகளிலும் தமது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கொழும்பு ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் மூத்த துறவி சுவாமி இராஜேஸ்வரானந்தஜீ மஹராஜ்,இலங்கைக் கிளை உப தலைவர் அக்ஷராத்மானந்தஜீ மகராஜ், ஸ்ரீமத் சுவாமி சுரார்சிதானந்தஜீ மகராஜ் உட்பட இராமகிருஸ்ணமிஷன் இல்ல மாணவர்கள் மற்றும் தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்