
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் சொல்லாடல் களத்தின் இறுதி நாள்
மட்டக்களப்பு இந்து கல்லூரியின் வரலாற்றில் நீண்ட காலம் அதிபராகக் கடமையாற்றிய (1979 – 1988) முன்னாள் அதிபர் அமரர் ஐ. சாரங்கபாணியின் 20ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமானது சாரங்கபாணி சொல்லாடல் களம் என்னும் பெயரினாலான விவாதப் போட்டியின் தெரிவு காண் போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பழைய மாணவர் சங்க தலைவர் மு. சதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
மேலும் குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் பழைய மாணவரும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளருமான என். தனஞ்செயன் கலந்து கொண்டார்.
மேலும் இதன் மாபெரும் இறுதிப் போட்டி இன்று திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும்.
குறித்த இறுதிப் போட்டிக்கு மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
மேலும் இப்போட்டிகள் யாவும் மின்னல்24 இணையத்தளத்தில் ஒளிபரப்பாகும்.
