மட்டக்களப்பு – ஆரையம்பதி திருநீலகண்ட விநாயகர் ஆலய பங்குனி உத்தர மகோற்சவம்

மட்டக்களப்பு – ஆரையம்பதி செங்குந்தர்வீதி திருநீலகண்ட விநாயகர் ஆலய பங்குனி உத்தர மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

ஈழமணி திருநாட்டின் மட்டக்களப்பு ஆரையம்பதி நகரில் செங்குந்தர் வீதிதனில் கோயில் கொண்டெழுந்தருளி அருளாட்சி புரிகின்ற நானூறு வருடங்கள் தொன்மையும் பழமையும் மிக்க திருநீலகண்ட விநாயகர் ஆலயத்தின் முதலாவது கொடியேற்ற மகோற்சவம் சுபமுகூர்த்த வேளையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 10/04/2025 அன்று தேரோட்ட உற்சவம் நடைபெற்று 11/04/2025 அன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது.

முருகப்பெருமானின் சூரன்போரில் படைத்தளபதிகளான நவ வீர்களின் வம்சத்தினராக அடையாளப்படுத்தப்படும் வீர செங்குந்த மரபினரால் பரிபாலிக்கப்பட்டு வரும் இவ் ஆலயமானது மட்டக்களப்பின் மண்முனையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த அரசியான உலக நாச்சியாரினால் அமைக்கப்பட்ட காசி லிங்கேஸ்வர ஆலயத்தின் வரலாற்று தொன்மை மிக்க எச்சங்களோடு தொடர்பு பட்டு நிற்கின்றமையும் இவ் ஆலயத்தின் தொன்மையினை உலகிற்கு பறைசாற்றி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றைய தினம் அடியவர்கள் சூழ திருநீலகண்ட விநாயகப்பெருமானின் கொடியேற்ற திருவிழா மிக கோலாகலமாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

  • Beta

Beta feature